ஓமிக்ரான் நுரையீரலை தாக்காது- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

கடந்த இரண்டு முறை வந்த கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு  கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் கடந்த 2021ல் வந்த டெல்டா வைரஸ் தொற்று பலருக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தியது.

நான் பெரிய பாடி பில்டர் என ஸ்ட்ராங் ஆக இருந்தவர்களை எல்லாம் கொரோனா தாக்கியது டெல்டா வைரஸ் கொரோனா நுரையீரலில் 70 சதவீதத்தை டேமேஜ் செய்ததால் பலர் உடனடி மரணத்தை தழுவினர் .

இந்த நிலையில் டெல்டாவில் இருந்து உருமாறியுள்ள ஓமிக்ரான் வைரஸ் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி பாதிப்புகள் அதிகரித்தால் அதிக பெட்கள் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதன் பாதிப்பு இன்னும் முழுமையாக உலகம் முழுவதும் தெரிய வராத நிலையில் ஓமிக்ரானால் நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் இதுகுறித்து பதற்றம் அடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment