அலர்ட்!! நாளை வெளியே வரவேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!!!

 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பெரம்பலூர். திருச்சி, கோயம்புத்தூர்.திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

செப்.1-ஆம் தேதி ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தார், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.