மாணவர்களே உஷார்!! விடுமுறை நாட்களில் இங்கு செல்ல கூடாது..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரம்… உத்தரவாதம் அளித்த இபிஎஸ்..!!

இந்த சூழலில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஆறு, குளம் மற்றும் கடல் போன்ற நீர்நிலைப்பகுதிகளில் இறங்கி குளிக்க கூடாது என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதே போல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தனியாக விடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் பேனா சின்னம்.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கேள்வி?

மேலும், மாணர்கள் செல்போன்களில் அதிக நேரம் மூழ்கி கிடக்காமல், பாட புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment