Connect with us

அனுமதி தராதீங்க..!! ஓபிஎஸ் கையெழுத்துடன் வந்த மனு!!

ஓபிஎஸ்

தமிழகம்

அனுமதி தராதீங்க..!! ஓபிஎஸ் கையெழுத்துடன் வந்த மனு!!

தற்போது அதிமுகவில் அசாதாரணமான சூழ்நிலை நிலவி கொண்டு வருகிறது. அதிமுகவில் இரு பெருந்தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது போல் தெரிகிறது. அதனால் தொண்டர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறை ஆவடி ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு உள்ளது என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். மேலும் வானகரத்தில் 23ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மனுதாக்கல் செய்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பொதுக்குழுவுக்கு அனுமதி கேட்டுள்ளார் என்றும் கூறினார் .

அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துடன் கூடிய மனு வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். கடந்த 18ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன என்றும் கூறினார்.

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரும் முழு அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே உள்ளது என்றும் அதனை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பொது பாதுகாப்பு கோரி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் விண்ணப்பித்து சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெஞ்சமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவு என்பதால் பொது குழுவுக்கான அனுமதியை மறுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top