உக்ரைனிய-இந்தியர்கள் பயப்பட வேண்டாம்; மூன்று விமானங்களை இயக்க ஏற்பாடு: ஏர் இந்தியா
உக்ரைன் நாட்டு மீது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்று நிலைமை தான் நிலவிக் கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்கா, உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் G7 நாடுகளும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைனுக்கு மூன்று விமானங்களை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களை இயக்க ஏர் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப ஏதுவாக 3 விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
