நெற்றி பாழ் நெற்றியாக இருக்க கூடாது- ஆன்மிக சின்னங்கள் முக்கியம்

தற்போதைய நவநாகரீக உலகில் நெற்றியில் விபூதி, குங்குமம், செந்தூரம், சந்தனம் வைப்பது குறைந்து வருகிறது. இது மிக மிக தவறானது. காலையில் எழுந்து குளித்தாலோ அல்லது எப்போது குளித்தாலோ நெற்றியில் சிவனுக்குரிய விபூதி இட்டுக்கொள்ள வேண்டும். கூடவே அம்பாளுக்கும், பெருமாளுக்கும் உகந்த குங்குமம் இட்டுகொள்ள வேண்டும். இப்படி நாள்தோறும் தன் வாழ்நாள் முழுவதும் செய்து வரவேண்டும்.

விபூதி தரித்த குங்குமம் தரித்த முகத்தோடு இருப்பது முகத்தில் ஒரு நல்ல களையை உண்டாக்கும், செல்லும் இடங்களில் நல்லதொரு மரியாதையை கொடுக்கும். தீய விளைவுகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.

சில கோவில்களில் விபூதியை மட்டும் கொடுத்து நெற்றியில் அணிய செய்து அவர்களுக்குரிய நோய்களை எல்லாம் அந்தக்காலத்தில் மகான்கள் தீர்த்து வைத்திருக்கிறார்கள் விபூதி மிகவும் மகத்துவமானது.

நீரில்லா நெற்றி பாழ்நெற்றி என்பது ஆன்றோர் வாக்கு. சிலர் நன்றாக கோவில்களுக்கு எல்லாம் செல்கின்றனர் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு செல்லும்போது மட்டும் அங்கு கொடுக்கும் விபூதி, குங்குமத்தை வைத்துக்கொள்கின்றனர். மற்ற நேரங்களில் அதாவது தினசரி குளித்து முடித்து வேலைக்கு செல்லும்போது திருநீறு குங்குமம் வைக்க வேண்டும் என்று தினசரி பின்பற்றுவது  கிடையாது எப்போதும் திருநீறு, குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் இவற்றில் ஒன்றாவது நம் நெற்றியில் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நெற்றி தெய்வகடாட்சமாக இருக்காது. தெய்வ அருள் முழுமையாக கிடைக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews