பிணத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அதில் நாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் சாதி ரீதியான கொடுமைகள் நடப்பதாக தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக தன்னுடைய மகன் இளைய ஆசிரியரால் கொலை செய்யப்பட்டதாகவும், இருப்பினும் வீட்டில் தற்கொலை செய்தது போல் சித்தரிக்கப்பட்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனுமதியின்றி மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததாக கூறினார். இத்தகைய சம்பவம் பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

இதனால் தனது மகனின் உடலை மருத்துவக்குழு நிபுணர்களுடன் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவரின் உடலானது மருத்துவ குழுவுடன் பிரேத பரிசோதனை செய்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வீடியோ பதிவு செய்ததாகவும், உடலை வாங்காமல் இருப்பதால் தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும், இதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் என தெரிவித்தார். அதோடு மாணவனின் உடலை நாளை 10 மணிக்குள் இறுதிசடங்கு செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும், தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அடக்கம் செய்யும் என்றும் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment