2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம்: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்..!

2000 ரூபாய் நோட்டை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு சில நிபந்தனைகள் விதித்திருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு டாஸ்மாக் உள்பட பல கடைகளில் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென அரசு பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டு பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஆம்னி பேருந்தில் 2000 ரூபாய் நோட்டு வாங்கப்படும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டு வாங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் வாங்கப்படும் என்ற தகவல் 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துள்ளது.

பெரும்பாலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் தற்போது 2000 ரூபாய் நோட்டு இல்லை என்பதால் பெரும்பாலான பயணிகளுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஆனால் 2000 ரூபாய் நோட்டை அதிகம் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே அதை தற்போது மாற்றிக்கொள்ள ஒரு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ரூபாய் நோட்டை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த நோட்டு திரும்ப பெரும் நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் இந்த அறிவிப்பு ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.