இதுபோன்ற முட்டாள்தனமான கேள்வியை கேட்காதீர்கள்… ஸ்ருதி ஹாசன் காட்டம்…

மாபெரும் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பணியாற்றும் நடிகை மற்றும் பாடகி ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் ஸ்ருதி ஹாசன். 2011 ஆம் ஆண்டு சூர்யாக்கு ஜோடியாக ‘7 ஆம் அறிவு’ திரைப்படத்தில் நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் வென்றார் ஸ்ருதி ஹாசன்.

தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சில காலம் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் பின்னணி பாடகியாக பாடல்களையும் பாடி வந்தார் ஸ்ருதி ஹாசன். 2012 ஆம் ஆண்டு தனுஷுடன் ‘3’ படத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் ‘பூஜை’, ‘புலி’, ‘வேதாளம்’ ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களான விஷால், விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்தார். சமீப காலமாக டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை உலகறிய காதலித்து வந்து சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கோபமடைந்த ஸ்ருதி ஹாசன், நாம் 2024 ஆம் ஆண்டில் இருக்கிறோம், இந்த காலத்திலும் எப்போது திருமணம் என்கிற முட்டாள்தனமான கேள்வியை கேட்காதீர்கள் என்ற காட்டமாக பதிலளித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews