தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்தப்படும் கழுதைகள்… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…..

நம்ம ஊர்ல எல்லாம் கழுதைப்பால் உடம்புக்கு நல்லது, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்னு தானே சொல்லுவாங்க. அதுமட்டும் இல்லைங்க இந்த காரணங்களால ஒரு சங்கு கழுதைப்பாலே 500 ரூபாய் வரைக்கும் கூட விற்பனையாச்சு. நம்ம ஊர்ல கழுதைப்பாலுக்கு மட்டும் தான் டிமாண்ட் ஆனா ஆந்திரால கழுதைக்கே டிமாண்டாம்.

கழுதைகள்

ஆமாங்க கழுதை கறி சாப்பிட்டா உடல் வலிமை பெறும்னு ஆந்திர மக்கள் நினைக்கிறாங்களாம். அப்படினா தமிழ்நாட்ல இருந்து கழுதைகளை விலை கொடுத்து தான வாங்கனும். ஆனா அவங்களோ சட்ட விரோதமா இங்க இருந்து கழுதைகளை திருடிட்டு போறாங்களாம்.

அப்படி சமீபத்துல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில இருந்து கடத்திச் செல்லப்பட்ட 6 கழுதைகள் வேலூரில் மீட்கப்பட்டுள்ளன. வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மினி வேன் ஒன்றில் கழுதைகளை ஏற்றிகொண்டு ஆந்திராவை சேர்ந்த 5 பேர் சென்றிருக்கிறார்கள்.

போலீசாரை கண்டதும் வேனை நிறுத்தாமல் போகவே சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்று பிடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வாகனத்தை விரட்டி பிடித்தபோது வேனில் இருந்த 4 பேர் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஓட்டுனர் சீனிவாசலால் என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விட்டனர் .

அவரிடம் விசாரித்தபோது, “உடல் வலிமைக்கு நல்லது என கருதி ஆந்திராவில் கழுதைகறியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அறிவியல் பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் மக்கள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். கழுதை கறி சாப்பிடுவது சட்டப்படி குற்றம் என்றும், அதை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர மாநில அரசு எச்சரித்துள்ளது.

எனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்” என கூறியுள்ளார். இதனையடுத்து திருடி சென்ற 6 கழுதைகளையும் உரிமையாளரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். மூட நம்பிக்கைகளால் கழுதை கறியை கூடவா சாப்பிடுவாங்க….

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment