Connect with us

இனி வனப்பகுதியை சுற்றி மின்கம்பி அமைத்து வனவிலங்கு இறந்தால் ரூ.75 லட்சத்தை டான்ஜெட்கோ தான் வழங்க வேண்டும்!: தீர்ப்பாயம்

electric barbed

செய்திகள்

இனி வனப்பகுதியை சுற்றி மின்கம்பி அமைத்து வனவிலங்கு இறந்தால் ரூ.75 லட்சத்தை டான்ஜெட்கோ தான் வழங்க வேண்டும்!: தீர்ப்பாயம்

இனி வனப்பகுதியை சுற்றி மின்கம்பி அமைத்து வனவிலங்கு இறந்தால் ரூ.75 லட்சத்தை டான்ஜெட்கோ தான் வழங்க வேண்டும்!: தீர்ப்பாயம்

பொதுவாக வனவிலங்குகள் ஆக்ரோஷம் கொண்டால் சுற்றி இருப்பவர்கள் யாரென்று கண்டுக் கொள்ளாமல் உயிர் சேதத்தையும் பயிர் சேதத்தை உருவாக்கும். இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மனிதன் பல்வேறு விதமான முறைகளில் ஈடுபடுவான்.

அவற்றில் ஒன்றுதான் பயிர்களை சுற்றி வேலி அமைத்து அதில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது. வனப்பகுதியில் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற நிகழ்வுகள் அங்கு வனவிலங்குகள் உயிரிழந்தால் அதற்கு அபராதம் விதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மின்கம்பியை மிதித்து வனவிலங்குகள் உயிரிழப்புக்கு டான்ஜெட்கோ தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. வனத்துறைக்கு இழப்பீடாக ரூபாய் 75 லட்சத்தை  டான்ஜெட்கோ தான் வழங்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

வனப்பகுதியில் மின்சார வயர் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் தடைபடும் வழிமுறை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. ஏனென்றால் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வனப்பகுதியில் இருந்து விழுந்த மின்சார வயரை மிதித்து ஒரு யானை உட்பட விலங்குகள் உயிரிழந்த வழக்கில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top