உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடல் மருத்துவ படிப்புக்கு தானம்..

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு  பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாதம் உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி  கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா உணவு வாங்க சென்றபோது ரஷ்ய குண்டுவீச்சில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தினால் உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாணவனில் பெற்றோர் பிரதமருக்கு கோரிக்கை வைத்தனர்.

அந்த வகையில் வருகிற 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் பெங்களூருவுக்கு வந்து சேரும் என்றும் அதன்பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும் என நவீனின் தந்தை சங்கரப்பா கூறியுள்ளார்.

மேலும், நவீனின் உடலை மருத்துவம் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்காக தேவநகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானமளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment