ஓ.டி.டி.யில் வெளியாகிறது ‘டான்’: எப்போது தெரியுமா ?

தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு துணை நடிகராக அறிமுகமாகி தற்போது கோலிவுட் மட்டுமில்லாது பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் மனம் கொத்தி பறவை, ரஜினிமுருகன். மான் கராத்தே, ரெமோ, காக்கி சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடிதார்.

213951 don

இந்நிலையில் இவர் நடித்த கடந்த மே-13 ஆம் தேதி வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து இருக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.

Don Second Single135

இதனிடையே இப்படம் வெளியாகி சுமார் 16 நாட்கள் ஆன நிலையில் சுமார் சுமார் ரூ.100-க்கு மேல் வசூல் வேட்டையை படைத்துள்ளது. இந்த சூழலில் டான் படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வருகின்ற ஜூன் 10-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment