மே 13ம் தேதி உலகத் திரையரங்குகளில்…நாளை இரவு 7 மணிக்கு டான் ட்ரெய்லர்…!!

தனது திறமையால் தனது கடின உழைப்பால் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய நட்சத்திரமாக உருவானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதன் பின்பு டாக்டர் படக்குழுவினரோடு அடுத்த படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தார். அந்த திரைப்படத்திற்கு டான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டான் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது.

இவ்வாறு உள்ள நிலையில் டான் திரைப்படம் மே 13ஆம் தேதி திரையரங்குகள் அனைத்திலும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளைய தினம் இரவு 7 மணிக்கு டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளதாகவும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment