
பொழுதுபோக்கு
வசூலில் மாஸ் காட்டும் ’டான்’ படம்..! எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடித்த ‘டான்’ படம் திரையரங்குகளில் 12 நாட்களை தாண்டி வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே-13 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் டான் வெளியாகி 12-நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் சுமார் ரூ.100 தாண்டி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
