
பொழுதுபோக்கு
டான் பட நடிகைக்கு இப்படி இருக்கிற மாப்பிள்ளை தான் வேணுமாம்! அவரே கூறிய தகவல்!
தமிழ் சினிமா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திறமைசாலி . சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஷிவாங்கி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கேற்ற சிவகார்த்திகேயன், ஷிவாங்கியை மிகவும் பிடிக்கும் என அவர் குரலில் மிமிக்ரி செய்தார்.
இவருக்கு டான் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஷிவாங்கியின் முதல் படம்.என்னதான் ஷிவாங்கிக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும் அவரை வெறுக்கும் கூட்டமும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது. டான் படத்தின் ட்ரைலர் வெளியான போதே அதில் ஷிவாங்கி கொடுத்த ஒரு ரியாக்ஷனை வைத்து அவரை பலரும் கேலி செய்து இருந்தனர்.
மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் இணைய போகும் மீனா! யாருடன் தெரியுமா?
