
பொழுதுபோக்கு
வாரிசு படத்தில் இணையும் டான் பட வில்லன்.. அதற்கு யாரு காரணம் தெரியுமா?
விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடபள்ளி இயக்கும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வை த்துள்ளதாக சமீபத்தில் விஜய் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பிறந்தநாளன்றே வாரிசு படத்தின் முதல் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதே நேரத்தில் சமூகவலைத்தளத்தில் இந்த போஸ்டர்கள் ரஜினி பட காப்பி என விமர்சித்து வருகின்றனர் . இந்த படத்தின் கதையும் 40 ஆண்டுகளுக்கு முன் உள்ள பிரெஞ்சு படத்தின் காப்பி தான் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ,அதைத்தொடர்ந்து காமெடி காட்சிகள்,சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் ஜெயசுதா, சங்கீதா கிருஷ் என்று பல முன்னணி பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர்.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல முன்னணி பிரபலங்கள் நடிக்கும், இந்த படத்தில் நடிகரும், டைரக்டருமானவும் இணைய உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா அவருடன் மெர்சல் படத்தில் வில்லனாகவும் நடித்தார்.
தற்போது மாநாடு,டான் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லனாக நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.
தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாக இருக்கிறதா? ஆதாரம் இதோ!
