ஜால்ரா தட்டியவருக்கு ஆப்பு வைத்த டான் பட ஹீரோ! என்ன நடந்தது?

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் டான் . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் 19வது (எஸ்.கே.19) படமாகும்.வரும் 13ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

images 2021 11 05T180714.669

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வருகிறது

இந்நிலையில் சத்யம் தியேட்டரில் டான் திரைப்படத்திக்காக ஒரு மிகப் பெரிய பேனர் வைக்க,அதைப்பார்த்த சிவகார்த்திகேயன் படக்குழுவினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதாவது அந்த பேனரில் எஸ் ஜே சூர்யாவின் போட்டோவை பெரிதாகப் போட்டு விட்டு சிவகார்த்திகேயன் அவருக்குப் பின்னால் நிற்பது போன்று சிறிய போட்டோ உள்ளதாம்.

அஜித்தை அவர் முன்பே கலாய்த்த கில்லாடி!..

இதனால் கோவத்தில் சிவகார்த்திகேயன் அந்த போட்டோவை மாற்றும்படி படக்குழுவினருக்கு ஆர்டர் போட்டிருக்கிறார்.

FM0H2COakAI Hg6

சில நாட்களுக்கு முன்பு எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயனை விஜய்க்கு அடுத்தபடியாக குடும்ப ரசிகர்களை கொண்டவர் இவர்தான் குடும்பங்கள் போற்றும் ஹீரோ என புகழாரம் சூட்டினார்.

ஆனால் இதை எல்லாம் நினைத்துப்பார்க்காத சிவகார்த்திகேயன் தன் படத்தில் தனக்கு தான் முதலிடம் இருக்க வேண்டும் என தலைக்கனத்துடன் நடந்துள்ளார்.

ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நான்கு நடிகர்களுக்கு பிறகு வசூல் சாதனை புரியும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவருடைய இடத்தை இன்னும் சூர்யா, தனுஷ் கூட தொடவில்லை என்பது தான் உண்மை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment