நடிகர் விஷ்ணு விஷால் தனது தான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் அதிக இசை எழுப்பியதாகவும் அதை தட்டி கேட்டவர்களை அவர் அநாகரிகமாக பேசியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த புகாருக்கு விஷ்ணு விஷால் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது. தான் அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறேன் என்றும் டயட்டில் இருந்து வருகிறேன் என்றும் டயட்டில் இருக்கும் ஒரு நபர் எப்படி மது அருந்துவார் என்றும் ஒரு லாஜிக் வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
தன்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய வைக்க தொழிலதிபர் குடும்பத்தினர் இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் தனது தாய் தந்தைக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் இங்கு தங்கி இருப்பதாகவும் சினிமா தொடர்பான நண்பர்கள் தன்னை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றவர்களுக்கு தான் எப்படி தொல்லை கொடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்
அதோடு தான் ஒரு சினிமாக்காரன் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது குடியிருப்பில் இருப்பவர்கள் தன்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
மேலும் போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்