
Tamil Nadu
ரூ.1000-ஐ தாண்டிய வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக பெட்ரோல், டீசம் விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனிடையே 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது ரூ. 1015. 50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், முந்தைய சிலிண்டர் விலையில் இருந்து தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
