90களின் ஆரம்பத்தில் புது வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வலுவான காலை ஊன்றிய நிறுவனம் ஆர்.பி செளத்ரி அவர்களின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஆகும். புதிதாக படம் இயக்க வரும் இயக்குனர்கள் பலரை முன்னணி இயக்குனராக்கியவர் ஆர்.பி செளத்ரி . இதுவரை பல்வேறு கட்ட படங்களை தயாரித்த ஆர்.பி செளத்ரி தனது90வது படைப்பாக களத்தில் சந்திப்போம் படத்தை தயாரித்துள்ளார்.
ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா- அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கரும், ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களத்துடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.