Connect with us

பிற மத நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை! தற்கொலை செய்த மாணவியின் பள்ளி நிர்வாகம்;

religion

செய்திகள்

பிற மத நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை! தற்கொலை செய்த மாணவியின் பள்ளி நிர்வாகம்;

பிற மத நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை! தற்கொலை செய்த மாணவியின் பள்ளி நிர்வாகம்;

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டே வருகிறது. இதனால் மாணவிகள் வரிசையாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக தஞ்சையில் பள்ளியில் படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதனை மதமாற்று கட்டாயத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பலரும் குறை சாட்டினர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் பிற மத நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை என்று கூறியுள்ளது. எவரது மதநம்பிக்கையிலும் குறுக்கிடாமல் சமயசார்பற்ற கல்வியை அளித்து வருகிறோம் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்த நிலையில் பள்ளி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியை நடத்தி வரும் சபை இவ்வாறு விளக்கம் அளித்தது.

அதில் மாணவி தனது வாக்குமூலத்தில் விடுதி காப்பாளர் மீது குற்றம் சுமத்தியதாக அறிகிறோம் என்றும் சபை தலைவி பாத்திமா கூறினார்.  துயர சம்பவத்தை சில பிரிவினர் அரசியல் லாபத்துக்காக திசை திருப்புவதாகவும் பொய்களை விதைப்பதாகவும் பள்ளி நிர்வாகம் புகார் வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top