கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா? -ஐகோர்ட் கிளை அதிரடி!!

கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளதா? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மதுரை அவனியாபுரத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமுருகன். இவர் பணியின்போது கவனக் குறைவாக இருப்பதாகவும் உரிய நேரங்களில் விடுமுறை எடுத்துக் கொண்டதன் காரணமாக மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தென்மண்டல காவல் துறையினர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, கர்மாவின் அடிப்படையில் பணியிடை மாற்றம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து காவல்துறையினர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது.

அப்போது காவல்துறையினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரருக்கு 13 முறை குற்றகுறிப்பானை வழங்கப்பட்டதாகவும், உரிய விதிமுறைகளை பின்பற்றி இவருக்கு மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு பணியிடை மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதிகள் கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை என்றும் கர்மாவுக்கு ஏதேனும் தனியாக விதிகள் உள்ளதா? என்று கேள்வியெழுப்பி நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment