Connect with us

எப்ப வேணாலும் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!! மக்களோடு இணைந்து மருத்துவர்களும் போராட்டம்!!

sri llannk kollai

News

எப்ப வேணாலும் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!! மக்களோடு இணைந்து மருத்துவர்களும் போராட்டம்!!

எப்ப வேணாலும் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!! மக்களோடு இணைந்து மருத்துவர்களும் போராட்டம்!!

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களோடு சேர்ந்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இலங்கையில் போராட்டம் வலுப்பெற்று காணப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக கோரி போராட்டங்கள் நடைபெறுகிறது.

கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களோடு இணைந்து மருத்துவர்கள் சங்கமும் போராட்டத்தைத் தொடங்கியது.

அரசின் செயல்பாடுகளால் சுகாதார அமைப்பு முற்றிலுமாக தகர்ந்து போகும் நிலை உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை மக்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற் சங்க உறுப்பினர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை மக்கள் வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ராஜினாமாவை பிரதான கோரிக்கையாக முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை அரசு ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. முன்னோட்டமாக மதியம் உணவு இடைவேளையின் போது நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது.

அரசுக்கு எதிராக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. இதில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேரும் கல்வித்துறை ஊழியர்கள் 16 ஆயிரம் பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் சிக்கலைத் தீர்க்க எல்லோரும் கட்சி பேதமின்றி செயல்பட வேண்டியது அவசியம் என்று சபாநாயகர் கூறினார்.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பல்வேறு உறுப்பினர்களும் கோத்தபய ராஜபக்சே  பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே  பதவியிலிருந்து விலக மாட்டார் என நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திட்டவட்டமாக கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top