‘டாக்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

975c20cb1cb802995963c507db697560

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் ‘டாக்டர்’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அக்டோபர் 9ஆம் தேதி ‘டாக்டர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி ‘எனிமி’ மற்றும் ’அரண்மனை3’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.