Entertainment
கோபித்து கொண்டு சென்ற அனிருத்தை சமானப்படுத்திய சிவகார்த்திகேயன்: 2 நிமிட காமெடி வீடியோ

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் பாடல் டிஸ்கஸன் நடந்தபோது அனிருது கோபித்துக் கொண்டு சென்றது போன்றும் அவரை சிவகார்த்திகேயன் சமாதானப்படுத்தி அழைத்து வந்து பாடலை கம்போஸ் செய்ய சொல்வது போன்றதுமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
இரண்டு நிமிடம் ஓடும் இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் அனிருத் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த வீடியோவில் ’டாக்டர்’ படத்தின் சிங்கிள் பாடலான செல்லம்மா என்ற பாடல் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் கம்போஸ் செய்யும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதுகிறார் என்பதும் இந்த பாடல் டிக்டாக் தடை பற்றிய காமெடி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது
