தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் ஏகே 61 வது படத்தில் நடித்துவருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போழுது இந்த படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித் ஐரோப்பாவில் விடுமுறையை கழித்து வருகிறார்.
இந்நிலையில் அஜித் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை சுற்றிப்பார்த்த வீடியோ சமீபத்தில் வைரலானது. நடிகர் அஜித் சென்ற நாடுகளுக்கு தற்போழுது நடிகை பிரியங்கா மோகனும் சென்று விடுமுறையை கழிப்பதாக வந்திருக்கும் தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரியங்கா மோகன், ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டுள்ளார்.
அதை தொடர்ந்து அவர் தலைவர் 169 படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பிரியங்கா மோகன் சமீபத்தில் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருந்தார்.
அடுத்தடுத்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் பிரியங்கா மோகன் ஓய்விற்காக தற்போழுது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் லண்டன் சென்றுள்ளார்.
விருது நிகழ்ச்சிக்கு மாடல் ட்ரெஸ்ஸில் வந்த ராஷ்மிகா! மிரளவைக்கும் அழகான வீடியோ!