நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அறிவிப்பு… விமர்சிக்கும் நெட்டிசன்கள்….!

கலைத்துறையில் சாதனை படைக்கும் நடிகர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகர் சிம்புவிற்கு இந்தாண்டு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு ஆறுமாத குழந்தை முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல பரிமாணங்களில் சிம்பு வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாகவே சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் நடிகர் சிம்புவும் இணைய உள்ளார். அதன்படி ஜனவரி 11ஆம் தேதி நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் நபர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரையின் பெயரிலேயே சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த டாக்டர் பட்டம் ஏதோ உள்நோக்கத்திற்காக வழங்கப்படுவதாக கூறி சிலர் இதை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஏனெனில் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் ஆகிய இரு படங்களையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. மேலும் வேல்ஸ் பல்கலைக்கழகம் தான் சிம்புவிற்கு டாக்டர் பட்டமும் வழங்க உள்ளது.

அதனால் ஒருவேளை சிம்புவின் கால்ஷீட்டுக்காக தான் இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கிறார்களோ? என சிலர் கேள்வி எழுப்புவதோடு பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment