மழை நீரில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் அங்குள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்தது
இந்த நிலையில் மழைநீர் தேங்கியிருந்தது தெரியாமல் காரில் சென்ற மருத்துவ அரசு மருத்துவர் சந்தியா என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து மேம்பாலம் அமைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என அந்த பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல் காரில் சென்ற அரசு மருத்துவர் காரின் சைலன்ஸரில் தண்ணீர் புகுந்ததால் வெளியே வர முடியாமல் அவர் உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.