
பொழுதுபோக்கு
புஷ்பா 2 படத்தில் நடிக்க ஆசையா? ஆடிசன் நடக்கும் இடம் தெரியுமா? முழு விபரம் இதோ!
இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. மைத்திரி மூவி மேக்கர்சும் முட்டம் செட்டி மீடியா நிறுவனமும் இதை தயாரித்த இப்படம் 250 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.
இந்த படம் வெளியான 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை புஷ்பா படம் படைத்தது.இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதைகளம் தயாராகி வருகிறது .
இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு சிறப்பாக இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் புஷ்பா படத்தை பார்க்கும் பொழுது இந்த படத்தில் நடித்து பிரபலமாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வரும். பொதுவாக படங்களில் நடிக்க விரும்புவார்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பல அப் களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றனர்.
Let's go 😊#PushpaTheRule#ThaggedheLe pic.twitter.com/LdEePnquM6
— Pushpa (@PushpaMovie) July 1, 2022
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.. யார் அந்த கேப்டன் மில்லர் கதை களம்?
அந்த வகையில் தற்போழுது புஷ்பா படத்தில் நடிக்க விரும்புவார்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். புஷ்பா படத்தில் நடிக்க விரும்புவருக்கு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் புஷ்பா படத்தில் நடிக்க ஆடிசன் திருப்பதியில் நடைபெறுவதாகவும், குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
