லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அட்சய திருதியை அன்று எதை மறந்தாலும் இதை வாங்க மறக்காதீங்க…! 

சில விஷயங்கள் செய்யும் போது பார்க்க காமெடியாக இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால் அதை செய்து பார்க்கும்போது தான் எவ்வளவு பலன் என்பது தெரிய வரும். அந்த வகையில் அட்சய திருதியை நாளில் இந்தப் பொருளை வாங்குங்கள்.

தங்கம், நகை, வெள்ளி பொருள்கள் எல்லாம் அவை விற்கிற விலைவாசிக்கு நம்மால் எல்லாம் வாங்க முடியாது என்று அங்கலாய்ப்பவர்கள் தாராளமாக இந்தப் பொருள்களை வாங்கலாம். அது உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

அட்சய திருதியை வரும் மே 10 ல் வருகிறது. அன்றைய தினம் நீங்கள் தங்கம், வெள்ளி வாங்குகிறீர்களோ இல்லையோ இந்த ஒரு பொருள் போதும். ஒவ்வொரு மாதமும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை திதியைத் தான் நாம் அட்சய திருதியையாகக் கொண்டாடுகிறோம். இந்த அட்சய திதி 10ம் தேதி அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் 2.50 மணி வரை உள்ளது. இருந்தாலும் நாம் 10ம் தேதியைத் தான் அட்சய திருதியையாக எடுத்துக்கொள்கிறோம்.

அன்று தான் தங்க நகைகள் வாங்கணும். அட்சய என்றால் வற்றாத, குறையாத, வாழ்ந்துகிட்டே போகக்கூடிய என்று பொருள். என்ன பொருள் வாங்கினாலும், என்ன விஷயம் செய்தாலும் அது வளர்ந்துகிட்டே போகணும் என்பதால் அன்றைய நாளில் நாம் செய்கிறோம்.

தங்கம், வெள்ளி வாங்குவது மட்டுமல்ல. அன்றைய தினம் சொந்தமாக வீடு வாங்கலாம். கார் வாங்கலாம். தன் பிள்ளைகளுக்கு வரன் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ணலாம். இப்படி செய்வது உங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடப்பதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும்.

Turmeric, Ghee, Salt
Turmeric, Ghee, Salt

கல் உப்பு, மஞ்சள், பசு நெய் ஆகிய பொருள்களை வாங்கி வைப்பது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். காலை 9.30 மணி முதல் 1030 மணி வரை, மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை உள்ள நேரங்களில் தங்கம், வெள்ளி ஆகிய பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் வாங்கலாம்.

Man satti
Man satti

புதிதாக மண்சட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இது அட்சயப்பாத்திரத்திற்கு நிகரானது. இதில் ஒருநாள் முழுவதும் அன்று பூஜை அறையில் வைத்து தண்ணீர் ஊற்றி வையுங்கள். அன்றைய தினம் தங்கம், வெள்ளி, கார் என என்ன பொருள்கள் வேணும்னாலும் வாங்குங்க.

ஆனால் கண்டிப்பாக இந்த மண்சட்டியை வாங்கி பூஜை அறையில் நீர் நிரப்பி வையுங்கள். மறுநாள் தண்ணீரை எடுத்து ஊற்றி விட்டு இந்த மண்சட்டியை சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதை சமையலறையில் எங்காவது வைத்துக் கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...