
பொழுதுபோக்கு
சிம்புவின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? புகைப்படத்துடன் வந்த அப்டேட் !
சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து , கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் நடித்து படப்பிடிப்பை முடித்து இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
அடுத்ததாக ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருந்தார் சிம்பு , ஆனால் அவரது தந்தை டி ராஜேந்திரனின் உடல் நிலை காரணமாக சிகிச்சைக்காக நியூயார்க் சென்றதால் இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போழுது வீடு திரும்பிய சிம்பு ‘பாத்து தல’ இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சில்லுனு ஒரு காதல்’ புகழ் திரைப்படத் தயாரிப்பாளர் ட்விட்டரில், “சகோதரன் @SilambarasanTR_ உடன் #பத்துதல படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டார், அவரது அப்பா குணமடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
All set for #pathuthala shoot with bro @SilambarasanTR_ feeling happy for recovery of his dad @kegvraja @StudioGreen2 @Gautham_Karthik @arrahman @PenMovies @NehaGnanavel @Dhananjayang pic.twitter.com/S9JbYXEncy
— Obeli.N.Krishna (@nameis_krishna) July 8, 2022
ஒரு கோடி பார்வை கடந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர்!
