Connect with us

தல அஜித் ஏன் இப்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வெளியிட்டார் தெரியுமா?

ajith 2

பொழுதுபோக்கு

தல அஜித் ஏன் இப்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வெளியிட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் அஜித்குமார். இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ரசிகர்கள் கொண்டாட தவறியது கிடையாது. நாளுக்கு நாள் இவரின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அஜித் ரசிகர்கள் அவரை படத்தில் ரசித்த காட்டிலும் அவர் தனிமனித வாழ்க்கையில் கடைபிடிக்கும் கொள்கைக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். “முதல்ல உன்னைப் பார்க்க உன் குடும்பத்தை பார்க்க நேரம் கிடைத்தால் என் படங்களை பார்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார்.

ajith main 2

மேலும் கடந்த ஆண்டு அஜித் தல என்று அழைக்க வேண்டாம், அஜித் குமார் என்று அழைத்தால் போதும் ஒரு அறிக்கை விட்டார். எனவே ரசிகர்கள் தனக்காக நிறைய நேரங்களையும் பணத்தையும் செலவழிப்பதும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபடுவது உணர்த்துவதற்காகவே இதுபோன்ற கோரிக்கைகளை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது இருப்பினும் படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது என இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தனது மொபைலிலில் வைத்துள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டசை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கழுதை மீது ஏறி இரு தம்பதியினர் பயணிக்கும் போது ஊர் மக்கள் பேசும் விமர்சனத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டே இருக்கும் போது ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்தாக அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அமைந்துள்ளது.இந்த டிவீட் தற்போது செம வைரலாகி வருகிறது. இதன் மைய கருது “நீங்கள் நம்புவதை மட்டுமே செய்யுங்கள், விமர்சனத்தினால் தங்களது கவனத்தை சிதறவிடாதீர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ajith whats app status

விஜய்யுடன் இணையும் சிறுத்தை சிவா! ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!

அதனால் அவர் யாருக்காக இப்படி ஒரு கருத்தை கூறி இருக்கிறார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது அஜித் சிவா கூட்டணி மற்றொரு படத்தில் இணைய உள்ளார். முன்னரே சிவாவுடன் இணைந்து பணியாற்றும் போது பல விமர்சங்களை எதிர்கொண்டார் அஜித். ஆகையால் அதற்கு பதிலடி கொடுக்கும் வைகையில் தான் இந்த ஸ்டேட்டஸ் வெளியிடப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top