சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் தனது உற்பத்தியை குறைத்ததன் காரணமாக, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே வாகன ஓட்டிகளின் காலை முதலில் இருந்தே பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னை மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில், 100% இருந்து 70% குறைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் உத்தரவு வழங்கியது.
அதேபோல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி என்பது குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதேபோல் கச்சா எண்ணெயின் வரத்தும் திடீரென குறைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மட்டுமே கிடைப்பதாகவும், டீசல் இல்லையென்று பலகை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.