
Entertainment
மன்மதன் ஹீரோவாக முதலில் நடிக்க இருத்தது யாரு தெரியுமா? அதுவும் மொட்டை கதாபாத்திரத்திலா?
நடிகர் சிம்பு ,மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம்மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க தாமரை பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டரில் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தற்போது பிஸியாக இருக்கையில் சிம்பு தனது சினிமா வாழ்வில் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. காதல் அழிவதில்லை, குத்து, வல்லவன், மன்மதன் போன்ற படங்கள் என்றுமே ரசிகர்களால் மறக்க முடியாதவை.
மன்மதன் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தில் ஜோதிகா நடிகையாக நடித்திருப்பார். மேலும் கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் முருகன் ஏ ஜெ இயக்கத்தில், சிலம்பரசன், ஜோதிகா நடித்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. சுமார் 1 வருடம் திரையிடப்பட்டு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது மன்மதன் படத்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கல் கிடைத்துள்ளது. மன்மதன் படத்தில் மொட்டை கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருப்பார். இப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்புவின் வெறித்தனமான ரசிகர் கூல் சுரேஷ் ஆவார்.
திருமணத்தால் வாய்ப்புகளை இழந்த நயன்தாரா.. நம்பர் 1 இடத்தை தட்டி தூக்கிய நடிகை!
