அஜித் வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்க இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.கலவையான விமர்சனங்களை பெற்று அஜித் ரசிகர்களை வருத்தத்தில் இருந்தலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது ஆறுதலாக இருந்தது.
தொடர்ந்து அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாஉழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித். படத்தின் கதைக்களம் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அப்படத்தின் நாயகி நயன்தாரா என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது சமந்தா இந்த படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் நயன்தாரா திருமணம் முடிந்தவுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
டி.இமான்-யை மறக்க முடியாமல் தவிக்கும் முதல் மனைவி.! ஆத்திரத்தில் டிவிட் பதிவு !..
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ஆயுர்வேத சிகிச்சை செய்யப் போவதாகவும், படத்தில் நடிக்க 6 மாதங்களுக்கு மேல் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.
அதனால நயன்தாரா அஜித் மற்றும் விக்னேஷ் இணையும் படத்தில் சமந்தா நடிக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற காத்துவக்குல 2 காதல் படத்தில் சமந்தாவின் நடிப்பு மிக அபாரமாக இருந்தது. அவர் மறுபடியும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.