Connect with us

சிறுத்தை சிவா – சூர்யா படத்திற்கு யாரு ஹீரோயின் தெரியுமா? அவங்களா அப்போ படம் மாஸ் தான்..

ss 1

பொழுதுபோக்கு

சிறுத்தை சிவா – சூர்யா படத்திற்கு யாரு ஹீரோயின் தெரியுமா? அவங்களா அப்போ படம் மாஸ் தான்..

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சிவா. விக்ரமகுடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் சிறுத்தை என்றாலும் மிக அருமையாக அந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து அஜீத்தின் மூன்று படங்களை இவர் இயக்கியதால் மிக வேகமாக பிரபலமடைந்தார்.

தற்போழுது நடிகர் சூர்யா இயக்குனர் சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது. சூரரைப் போற்று,ஜெய் பீம் ,எதற்கும் துணிந்தவன் வெற்றி படத்திற்கு பிறகு, இயக்குனர் பாலா உடன் கூட்டணியுள் இணைத்துள்ளார் சூர்யா.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

surya7909 28 1490680094

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கூட வெளியானது.

இந்த இரண்டு படங்களை முடித்த பிறகுதான் சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் அடுத்ததாக படம் உருவாக்க உள்ளது.இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

jpg 3

வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக யார் நடிகையுள்ளார் தெரியுமா? பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தான்.

புஷ்பா 2 படத்தில் நடிக்க ஆசையா? ஆடிசன் நடக்கும் இடம் தெரியுமா? முழு விபரம் இதோ!

மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் பூஜா ஹெக்டேவின் மவுசு கொஞ்சம் உயர்ந்துள்ளது.இதனால் இவர் தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி வரை பூஜா ஹெக்டே சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேசிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top