ஆவடி மாநகராட்சி துணை மேயர் வேட்பாளர் யார் தெரியுமா? அறிவித்தார் வைகோ;
இன்று மதியம் திமுக சார்பில் இருந்து கூட்டணி கட்சிகள் கான பதவி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி மதிமுக வரை அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் பதவி பங்கினை திமுக வரிசையாக அறிவித்துள்ளது.
அதில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் மதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு திமுகவை சேர்ந்த சூரியகுமார் போட்டியிடுகிறார் என்று வைகோ கூறியுள்ளார். மாங்காடு நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுகவைச் சேர்ந்த சுமதி முருகன் போட்டியிடுவார் என்றும் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பேரூராட்சி தலைவர்கள் வேட்பாளர்களாக திருவேங்கடம் பேரூராட்சியில் பாலமுருகனும், ஆடுதுறை பேரூராட்சியில் சரவணனும், சென்னசமுத்திரம் பேரூராட்சியில் பத்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திமுகவின் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
