மாஸ்காட்டும் கே.ஜி.எஃப்-2 : ட்ரைலர் தேதி எப்ப தெரியுமா ?

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் நடிகர் யாஷ் ஹீரோவாகவும், ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினியாகவும் நடித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகில் மிகபெரிய வெற்றியை கொடுத்தது.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தாண்டு ரசிகர்களால் திரையரங்குகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம்தான் கே.ஜி.எஃப்-2. இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனாவின் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் கே.ஜி.எஃப்-2. ஏப்ரல் 14 அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது கே.ஜி.எஃப்-2 படத்தின் ட்ரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் பட குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment