உதயநிதி பேச்சால் கடுப்பான அஜித் ரசிகர்கள்….! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

உதயநிதி

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சால் அஜித் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். அதாவது பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “சென்னை சத்யம் திரையரங்கில் மொத்தமுள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்படும்” என இயக்குனர் ராஜமவுலியிடம் கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி இருப்பதோடு, அஜித் ரசிகர்களையும் கடுப்பாக்கி உள்ளது.

ஏனென்றால் ஆர்ஆர்ஆர் படம் வெளியான ஒரு வாரத்தில் அஜித்தின் வலிமை படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்துக்கு 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்கள் ஒதுக்கினால், மீதமுள்ள ஒரே ஒரு ஸ்கிரீனில் தான் வலிமை படத்தை திரையிடுவீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழ் படத்திற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment