இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் மொழியில் படத்திற்கான டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது தவிர சென்னை டிரேட் சென்டரில் டீசர் வெளியீட்டு விழா எளிய முறையில் நடைபெற உள்ளது .மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யு டியூபில் மட்டும் இந்த படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையைக் கடந்துள்ளது. பல வருடங்களின் எதிர்பார்ப்பாக இந்த படம் அமைந்ததால் இந்த படத்திற்கு ரசிகர்கள் திரைத்துறையினரிடையே நல்ல மதிப்பும் வரவேற்பும் பெற்றுள்ளது.
இரவின் நிழல் படத்தில் கழுதையா? கழுதைக்கு முத்தம் கொடுக்கும் ஹீரோ!