“AK 61” பட கதை என்ன தெரியுமா?… கசிந்தது ரகசியம் !!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடித்த கடந்த மாதம் 24- ஆம் தேதி திரைக்கு வந்த வலிமை திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டியது.
இந்த படத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஒருபுறம் ரசிகர்கள் கொண்டாடி கொண்டுதான் வருகின்றனர். இந்நிலையில் தற்போது 300 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 25 கிலோ எடை குறைக்க இருப்பதாகவும் தற்போது 10 கிலோ குறைத்து விட்டாராம்.
இந்த படத்தை எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் மங்காத்தா படத்தை அடுத்து அஜித் நடிக்கும் கொள்ளை படம் இதுவாக தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஏகே 61 படத்திற்கு வல்லமை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
