போன ஆட்சியில பொங்கல் பரிசு தொகுப்போடு பணம் வழங்கப்பட்டதுக்கான காரணம் என்னன்னு தெரியுமா?: அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபட்டு வருகிறது. இதில் 21 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் இந்த பொங்கல் பரிசு குறைபாடுகளும் காணப்படுகிறது. ஆனால் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களோடு சேர்த்து கூடவே பணமும் வழங்கப்படும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

பரிசு தொகுப்பு

அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அமைந்துள்ளது. இது குறித்து பலரும் விமர்சனம் செய்து வந்தனர். கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு சேர்த்து பணமும் வழங்கப்பட்டது. இந்தப் பணம் ஏன் வழங்கப்பட்டது என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுப் பொருளுடன் சேர்த்து பணம் வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு என்ற பெயரில் பணம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்து வருவதாகவும் அவர் கூறினார். பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான ஓபிஎஸ், இபிஎஸ் இன் பொய் பரப்புரை மக்கள் மன்றத்தில் தோற்றுப் போகும் என்றும் அமைச்சர் கூறினார்.

திமுக ஆட்சியில்  வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தப் பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு என கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் அதற்கான ஆதாரம் இருந்தால் என்னை சந்திக்கலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment