Connect with us

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஓடிடி- ரிலீஸ் தேதி தெரியுமா?..

KOO

பொழுதுபோக்கு

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஓடிடி- ரிலீஸ் தேதி தெரியுமா?..

மே 6ம் தேதி வெளியாகிய கூகுள் குட்டப்பா படம் மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இது.இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, பூவையார், மாரிமுத்து என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

KOO 2

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் தர்ஷனின் தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். 60 வயதுடைய ஒரு கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்.

கிராமத்தில் அமைதியாக வாழும் தனது தந்தைக்கு தர்ஷன் ரோபோவை துணையாக விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறார்.முதலில் ரோபோவை பார்த்து வெறுக்கும் ரவிக்குமார், போகப் போக அதனுடன் நெருக்கமாகப் பழகிவிடுகிறார். நான்கு மாத பரிசோதனை காலம் முடிய ரோபோவை எடுத்து செல்ல வருகிறார் தர்ஷன்.

KPP

ஆனால், ரவிக்குமார் ரோபோவை அனுப்ப மறுக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதைகளம் ஆகும் . இந்த படத்தில் தர்ஷன் – லாஸ்லியாவிற்கு இடையில் காதல் காட்சிகள் இல்லை. படத்தில் யோகிபாபுவிற்கு பெரியாத காமெடி எடுபடவில்லை.

பொதுவாக இம்மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களை குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் எடுத்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

ரசிகரின் வீட்டில் தல அஜித்!!.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!..

இந்த படம் வெளியாகி 29 நாட்கள் கழிந்த நிலையில் வரும் ஜூன் 3 ஆம் தேதி ‘கூகுள் குட்டப்பா’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top