
Entertainment
‘டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா ??
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. ‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியிட்டுள்ள இப்படத்திற்கு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ,குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படத்தில் அப்பாவாக சமுத்திரகனி நடிக்க மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்,கல்லூரியின் டிசிப்ளின் கமிட்டியின் தலைவராக நம் எஸ்.ஜே சூர்யா இருக்க அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே அப்போ அப்போ முரண்பாடு ஏற்படுகிறது.
காதல், காமெடி, டான்ஸ், ஃபைட், சென்டிமெண்ட் என அனைத்தும் இணைந்த கல்லூரி கதையாக இந்த படம் அமைகிறது.நண்பன் பட ‘வைரஸ்’ சத்யராஜ் கேரக்கரில் தான் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பார்.விஜே விஜய், சிவாங்கி, ராமதாஸ் என துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
’டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் டாக்டராக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் ’டான்’ ரேஞ்சுக்கு சில பல வேலைகளையெல்லாம் செய்வார். ஆனால், ’டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் அப்படி இல்லாமாம் எதிர்பாராத நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.
AK 62 ஹீரோயின் யார் தெரியுமா?.. வெளியான தகவலால் குஷியில் ரசிகர்கள்!!..
இந்நிலையில் ‘டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜூன் 10-ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
