Connect with us

Onam festival: ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!!!

onam 16

ஆன்மீகம்

Onam festival: ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!!!

நாடு முழுவதும் செப்டம்பர் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட உள்ளது. இருப்பினும், ஓணம் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. தற்போது ஓணம் பண்டிகையின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

கேரளாவில் மகாபலி சக்கரவர்த்தி என்ற அரசர், அவருடைய ஆட்சிக்காலத்தில் அம்மாநிலம் முழுவதும், செல்வ செழிப்போடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாபலி சக்கரவர்த்தி முன் ஜென்மத்தில் எலியாக இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் ஒரு நாள் சிவன் கோயிலில் விளக்கு அணையும் பட்சத்தில், விளக்கின் திரியைத் தூண்டி விட்டதாக தெரிகிறது.

onam

இத்தகைய செயலை பார்த்த சிவபெருமான், நீ மறுஜென்மத்தில் கேரள மாநிலமே கொண்டாடும் வகையில் அரசனாக பிறப்பாய் என்று வரம் கொடுத்தது. அதன்படி அடுத்த ஜென்மத்தில் மகாபலி சக்கரவர்த்தி பிறந்து, மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்து வந்தார். இத்தகைய செயலை பார்த்து பொறாமை அடைந்த தேவர்கள், விஷ்ணுவிடம் அடைக்கமாகினர்.

அதே சமயம் மகாபலி சக்கரவர்த்தி தலைமையில் வேல்வி நடைப்பெற்று இருப்பதாக தெரிகிறது. அப்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைப்பெற்று முடிந்த நிலையில், விஷ்ணு தாழம்பூ குடையுடன் மகாபலி சக்கரவர்த்தி அரண்மனையை நோக்கி சென்றார்.

onam1

அப்போது மகாபலி சக்கரவர்த்தி, உருமாறி வந்த விஷ்ணுவிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என கூறினார். அப்போது என்னுடைய 3 அடி கால் வைக்கும் மண் வேண்டும் என விஷ்ணு கூறினார். இதற்கு மகாபலி சக்கரவர்த்தி பெருமையாக ஒப்புக்கொண்டார். அப்போது குள்ளமான உயரத்தில் இருந்த விஷ்ணு வானம் உயரத்திற்கு வளர்ந்துவிட்டார்.

 

இதனை பார்த்த மகாபலி அதிர்ச்சியடைந்தார். அதே சமயம் விஷ்ணு முதல் அடியை மண் உலகிலும், மூன்றாவது அடியை விண்ணுலகிலும், மூன்றாவது அடியை மகாபலி தலைமீது வைத்தார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி சக்கரவர்த்தி பாதள உலகத்திற்கு அனுப்படுகிறார்.

onam3

அதே சமயம் மகாபலி சக்கரவர்த்தி விஷ்ணுவிடம், வரம் ஒன்றை கேட்டார். அதன் படி, வருடத்திற்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறினார். இதனை கேட்ட மகா விஷ்ணு அவருக்கு வரத்தை கொடுத்தார். அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10 நாட்கள் மக்களை அவரை வரவேற்கும் விதத்தில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top