
Entertainment
விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இதுவரை வெளியான ஃபஸ்ட் லுக் தொகுப்பு தெரியுமா?
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுவாக ஜூன் 22ம் தேதி விஜய் அவர்களின் பிறந்தநாள் அன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் தளபதி 67 படத்திற்காக விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேரவுள்ளார்.இதற்கான அதிகாரபூர்வ தகவல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்பாக விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இவர் நடித்து கொண்டிருக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டராய் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
அதே போல ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியானது.
அட்லீ இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியானது.
அதை தொடர்ந்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியானது.
அஜித் – விஜய் இணையும் படம்! பான் இந்தியா படமா?
