அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி எப்போ தெரியுமா?

தமிழகத்தில் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய கட்சி அதிமுக. அதில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற போட்டி  நீண்ட காலமாக நடந்து வருகிறது.

அதில்  தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி அணிகளுக்கு இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, வேட்பாளர்கள் மார்ச் 18 ஆம் தேதி மற்றும் மார்ச் 19 ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் மார்ச் 21 ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்களுக்கு நவரத்னா அறிவிப்பு : ஸ்டாலின்

மார்ச் 27-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கட்சியின் பொதுச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.