News
தாறுமாறாக உயர்ந்தது தங்கத்தின் விலை!! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தற்போது நான் நாம் வாழ்கின்ற நவீன காலத்தில் அனைத்து விலைவாசிகளும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவைகளின் விலை வாசிகளும் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் இதர பொருட்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. மகளிருக்கு மிகவும் மகிழ்ச்சியையும் அழகினையும் சேர்க்கும் தங்கத்தின் விலையானது தற்போது மிகவும் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக காணப்படுகிறது.
மேலும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 336 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 உயர்ந்து தற்போது சவரன் ஒன்றுக்கு 35304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் காணப்படுகின்றனர். மேலும் அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 42 ஆக உயர்ந்துள்ளது.
அதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 413 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் வெள்ளியின் விலையானது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 910 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலை 65010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
