இந்தியாவில் ஆயிரத்தை தாண்டிய ஒமைக்ரான்! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். இவை நம் நாட்டிலும் அதிக வேகத்துடன் பரவிக்கொண்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஆயினும் நாளுக்குநாள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் விளைவாக இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அதன்படி இந்தியாவில் இதுவரை 1270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ஒமைக்ராலிருந்து 374 பேர் குணமடைந்த நிலையில் 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறியுள்ளது. இந்தியாவில்  அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 450 பேர் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 320 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் 109 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. குஜராத்தில் தொண்ணூற்று ஏழு பேருக்கும், ராஜஸ்தானில் அறுபத்தி ஒன்பது பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment